/* up Facebook

Nov 1, 2009

நகரத்தின் கதை - தில்லை


கொலையுண்ட கொடிய நகரங்கள்
புதையுண்ட உயிர்களின் கல்லறைகளாய்
வெறிச்சோடிக் கிடக்கிறது
ஆயிரமாயிரமாய் வஞ்சிக்கப்பட்ட
தாய்களின் கனவழித்த தெருக்களும்
சில்லம்பல்லமாய் சிதறிக் கிடக்கிறது
நிமிடங்கள் நாட்கள் வருடங்கள் என
ஒவ்வொரு மகனும் மகளுமாக
இரத்தத்தை தழும்புகளை சுமந்த தேசம்
தரையோடு தரையாக கிடக்கிறது
யாரேனும் என்னை அனுமதியுங்கள்
எனது மகளை புதைத்த இடத்தை
தோண்டுவது எப்படி என்று சொல்லுங்கள்
பிரதான வீதியொன்றில் தனியாக
வெடித்து சிதறிய எனது மகள்
எனது மடியில் எப்படி உறங்கினாள்
என்று சொல்ல
நான் கட்டியிருக்கும் கந்தல் துணியுடன்
யாரேனும் என்னை அனுமதியுங்கள்.


12052009

1 comments:

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

வலியும் குருதியும் வழிந்தோடும் கவிதை. சூழலின் தீவிரம் அறிந்த மனிதர்களுக்கே கவிதையின் உள்-ஆழம் புரியும் - மற்றவர்களுக்கு இதுவும் ஒரு கவிதைதான்.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்